மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக, கணவனை போலீசார் கைது செய்தனர்.



தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளி ஜெரினா, இவருடைய கணவர் கலில். இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது வழக்கம். நேற்றிரவு சுமார் 2 மணி அளவில் இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் குடிபோதையில் இருந்த கலில் அவருடைய மனைவி ஜெரினாவை கத்தியால் குத்தியதில் ஜெரினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த ஒகேனக்கல் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள கொலையாளிகளை கலிலை தேடி வந்தனர்.  இதையடுத்து தலைமறைவாக இருந்த கலிலை போலிசார் கைது செய்தனர். 


🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு


No comments

Thank you for your comments