காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு – பல் மருத்துவர் கைது
காஞ்சிபுரம், ஜூன் 30:
திருப்பருத்திக்குன்றம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர், பூக்கடை சத்திரம் பகுதியில் தனது சொந்த பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார். சமீபத்தில், ஒரு தனியார் கல்லூரியில் B.Sc 3வது ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவி ஒருவர், பல் சிகிச்சைக்காக அவரை அணுகிய போது, மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, மனமுடைந்த மாணவி உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மணிகண்டன் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார், பல் மருத்துவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
இந்த சம்பவம் காஞ்சிபுரம் நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments