பழங்குடியினருக்கு புதுப்பிக்கப்பட்ட வீடுகள் திறப்பு விழா
காஞ்சிபுரம், டிச.19:
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சார்பில் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த 9 குடும்பங்களுக்கான வீடுகள் புதுப்பிக்கப்பட்டு அவற்றை திறந்து வைக்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு புஞ்சை அரசந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் பி.மீனாபழனி தலைமை வகித்தார்.துணைத் தலைவர் எம்.மோகன் முன்னிலை வகித்தார்.குழந்தைகள் கண்காணிப்பகத்தின் நிர்வாகி து.ராஜி வரவேற்று பேசினார்.
புதுப்பிக்கப்பட்ட வீடுகளை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எல்.தனலட்சுமி,தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரா.சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில் கிறிஸ்தவ கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் சுதர்சன்,பிரின்ஸ் சாமுவேல்,குழந்தைகள் கண்காணிப்பகத்தின் ஆலோசகர் செ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உட்பட பழங்குடியின மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஜி.தங்கவேல் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments