Breaking News

புதிரை வண்ணார் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மானியத்துடன் தொழில் கடன் உதவி

புதிரை வண்ணார் சமூகத்தை சார்ந்தவர்கள் தொழில் முனைவோராக விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளதாவது, 

முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM-ARISE) திட்டத்தின் கீழ் திட்ட  மதிப்புத்தொகையில் 35% அல்லது ரூ3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய  வங்கிக்கடனுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6% சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.

புதிரை வண்ணார்  சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் (https://newscheme.tahdco.com) தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு  தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி  விவரம்  பெற்று  உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

No comments

Thank you for your comments