Breaking News

செய்தியாளர் மீது தாக்குதல்: நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல் வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது – NJU தலைவர் Dr. கா. குமார் கண்டனம்

சேலம் மாவட்டம் வில்லியம்பட்டி பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத செம்மண் கடத்தலை பதிவு செய்ய முயன்ற பத்திரிகையாளர் சிலம்பரசன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, நேஷனல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (NJU) மிக கடுமையாகக் கண்டிக்கிறது என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் Dr. கா. குமார்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் Dr. கா. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"உண்மை செய்திகளை மக்கள் முன் கொண்டு வர தைரியமாக செயல்பட்ட பத்திரிகையாளரை, கொலை மிரட்டலுடன் தாக்கிய மண் கொள்ளை பேர்வழிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது ஊடகவியலின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தின் பாதுகாப்பையும் நேரடியாக சவாலுக்குள்ளாக்குகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை வெளிச்சம் போட முயல்கிற ஊடகவியலாளர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதும், அவர்களை சட்டவிரோதமாக சித்தரிப்பதும் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

பத்திரிகையாளர் சிலம்பரசனை தாக்கிய மண் கொள்ளையர்களும், அவர்களுக்கு பின்னால் இருக்கும் அதிகாரிகள், அரசியல் ஆதரவாளர்கள் மீதும்  அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்து, உண்மையை வெளியிட தைரியமாக செயல்படும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்."

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் பத்திரிகையாளர் சிலம்பரசனுக்கு முழுமையான ஆதரவும், நீதியும் வழங்கப்படும் என உறுதியளிக்கிறோம். ஊடகத்துறை மீதான மிரட்டல்களையும், ஊழலை மூடியடைக்கும் முயற்சிகளையும் ஒருமித்த குரலால் எதிர்த்து, ஜனநாயகத்தின் நெஞ்சாகிய ஊடக சுதந்திரத்தை காப்போம்.

இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் Dr. கா. குமார் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments