Breaking News

விவசாயிகளுக்கு கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட் கட்டுப்படுத்தும் அமைப்புகள் - மானியத்தில் பெறலாம்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல்துறை மூலம் விவசாயிகளுக்கு கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட் கட்டுப்படுத்தும் அமைப்புகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.


வேலூர் மாவட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் அமைப்புகள் மானியத்தி ல்வழங்கப்பட உள்ளது. இந்த அமைப்பு மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மின்சார பம்புசெட்களை தொலைவிலிருந்து அல்லது தங்கள் வீட்டில் இருந்தபடியே கைப்பே சிமூலம் இயக்கமுடியும்.

 இந்தஅமைப்பைபயன்படுத்துவதுமிகவும்எளிது. உங்களிடம் Android மொபைல்போன்இருந்தாலேபோதும். உங்கள் மின்சார பம்புசெட் திருடு போகாமல் தடுக்க இயலும் விவசாய பாசனத்திற்கு மிகவும் பயனுள்ளது. மின்சார மோட்டார் பம்பு அருகிலேயே அமர்ந்து ஆன்/ ஆப் செய்ய தேவையில்லை.

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, பயனுள்ள வேறு வேலையில் விவசாயிகள் ஈடுபடலாம். கிணற்றில் நீர் இல்லாத போது தானாகவே நீர் இறைப்பதை நிறுத்திவிடும். விவசாயிகள் தங்கள் மொபைல் போனிலியே வோல்டேச், கரண்ட், மோட்டார் ஓடுதல் நேரம், மோட்டாரின்  நிலை ஆகியவற்றை பார்க்க இயலும். 

மோட்டார் பம்பு செட் ஒருநாளைக்கு எத்தனை மணி நேரம் இயக்க வேண்டும் என கைப்பேசியில் டைமர் வைத்து விடலாம். எந்த இடத்தில் எந்த நேரத்தில் நீங்கள் இருந்தாலும், உங்களுடைய மொபைல் போன் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார்களை இயக்கமுடியும்.

தொலைதூரத்தில் உள்ள திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணற்றில் உள்ளநீர்மூழ்கி பம்புகளை இயக்கவும், கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் / கால் /  ஆண்ட்ராய்டு அப்ளிகேசனை பயன்படுத்திதங்கள் வீடுகளில் இருந்து அல்லது எங்கிருந்தும் மோட்டார் பம்புகளை இயக்கலாம் மற்றும் அணைக்கலாம். 

இதன் மூலம் நேரம், மின்சாரம் மற்றும் நீரை சேமிக்க இயலும். தீ மற்றும் திருட்டுக்கான அழைப்பு எச்சரிக்கை மூலம் கைப்பேசிக்கு அனுப்பப்படும். மழை தொடங்கும் போது மோட்டார்கள் தானாகவே நிறுத்தப்படும்.

குறைந்த மின்னழுத்தம், அதிக மின்னழுத்தம், உலர்ஓட்டம்மற்றும்அதிகசுமைஆகியவற்றிலிருந்துமோட்டார்காயிலுக்கு 100 சதவிகிதபாதுகாப்பு. SMS கட்டணம்இல்லை. மிஸ்டுகால்கள் மூலம் மட்டுமே செயலியிலிருந்து ஆன் மற்றும் ஆப் தகவல் தரப்படும். நீர்தேவையின் போது மோட்டார் தானாகவே இயக்கப்படும். இணைப்புகளை ஏற்படுத்த எலக்ட்ரிஷியன்கள் தேவையில்லை.

வேலூர் மாவட்டத்திற்கு 2024-25 ஆம் ஆண்டிற்கு கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்துதல் அமைப்புகள் 135 எண்கள் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு 125 எண்களும், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரிவிற்கு 10 எண்கள் பெறப்பட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவினருக்கு மொத்தவிலையில் 40 சதவிகிதம் அல்லது ரூ.5000/- மானியமும், ஆதிதிராவிடர் / பழங்குடியினர், சிறு / குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் அல்லது ரூ.7000/-இதில் எதுகுறைவோ அதுமானியமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா. சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

 

No comments

Thank you for your comments