Breaking News

முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் உதவி - 30% மூலதன மானியம்

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என்று  ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது, 

முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும், இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் எனவும் தமிழக அரசால் அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விருப்பத்தினை தொலைபேசி வாயிலாக முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

மேலும் விவரங்களுக்கு  அலுவலக தொலைபேசி எண்: 044 - 2226 2023 என்ற தொலைபேசியில் தொடர்பு  கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


 

No comments

Thank you for your comments