2 சிறுமிகளை கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்த தந்தை
அதீத குடிபோதையில் இரண்டு சிறுமிகளை கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்த தந்தை கைது..
காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது சிறுமி நதியா தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மது போதையில் எப்போது இருக்கும் கோவிந்தராஜ் தனது குடும்பத்தாருடன் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று இவருடைய மூத்த மகள் 16 வயதான நந்தினி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார், நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி தீபா இருவரும் வீட்டில் இருந்து இருக்கிறார்கள். வழக்கம்போல் இன்று பகல் ஓரகடம் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு அதிக போதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் இரு மகள்களும் கோவிந்தராஜு இடம் சண்டை போட்டிருக்கிறார்கள். இன்னிலையில் மது போதையில் இருந்த கோவிந்தராஜ் கட்டையால் இரு மகள்களையும் கொடூரமாக தாக்கி அடித்து கொலை செய்து இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கோவிந்தராஜ் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். மது போதையில் தனது இரு மகன்களையும் அடித்துக்கொன்ற தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிறுமிகளின் தாயார் வேலைக்கு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது
Post Comment
No comments
Thank you for your comments