விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மாதாந்திர  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் 24.12.2021 இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.  


இந்நிகழ்வில் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான தற்போது பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து  நிவாரணம் வழங்குதல், அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள்  மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கூடுதலாக கையிருப்பு வைத்தல் மற்றும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுத்தல், தனியார் உர நிறுவனங்கள் அதிக விலைக்கு உர‘ங்கள் விற்பதை தடுத்திட ஆய்வு மேற்கொள்ளுதல் -ஆகியவை முன் வைக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் கால்வாய்கள் முறையாக கணக்கீடு செய்து தூர் வாரி தடுப்பணைகளை சீரமைத்து, நீர்நிலை ஆக்கிரமிப்பு,களை அகற்றுதல்,  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை  அகற்றுதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன்  வழங்கும்போது உரிய  ஆவணங்களை முறையாக ஆய்வு செய்து தகுதியான விவசாயிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தப்பட்டது. 

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் எத்தனை கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு விடுவிப்பு செய்யும்  தொழிற்சாலைகள் மற்றும் நிலத்தடி நீரை உறிஞ்சும்  தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது  என மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூலம் முறையாக கணக்கீடு செய்திட அறிவுறுத்தப்பட்டது. 

வேலூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அதிகளவில் அமைத்திட நெல்சாகுபடி பரப்பு மதிப்பீடு செய்தல், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களை அனுமதிக்காமல் இருத்தல்

கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடைகளுக்கு அதிகளவில்  கோமாரி தடுப்பூசி  செலுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை கரும்பு அரைவை பருவத்திற்கு முன்னர் திறந்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல் 

விவசாய நிலங்களுக்கு இரவு நேரங்களில் மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்குதல் விவசாய நிலத்தில் வீடு கட்டு உள்ளவர்களுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கிட மின்சார துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.  

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் கடன் தொகையை செலுத்திய பின்னரும் பத்திரம் வழங்காமல் தாமதப்படுவதை தவிர்த்து விரைந்து பத்திரங்களை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுதல் 

இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர், கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்

செய்தி வெளியீட்டு எண்.619 / நாள்.24.12.2021              


No comments

Thank you for your comments