அக்.12, 19ம் தேதிகளில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு
ஈரோடு :
மேற்பர்வை பொறியாளர், ஈரோடு மின் பகிர்மான வட்டம், ஈரோடு, அவர்கள் தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
12.10.2022 (புதன் கிழமை) காலை 11.00 மணிக்கு செயற்பொறியாளர் / வினியோகம்/ தெற்கு/ ஈரோடு கோட்ட அலுவலகத்தில் (948 EVN ரோடு. ஈரோடு-9) நடைபெறும். எனவே அக்கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், அரச்சலூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு, ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வைபொறியாளர், அவர்களை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் .
19.10.2022 (புதன் கிழமை) காலை 11.00 மணிக்கு செயற்பொறியாளர் / இயக்குதலும் பேனுதலும்/ பெருந்துறை கோட்ட அலுவலகத்தில் (33/11 கி.வோ.துணை மின் நிலையம் வளாகம், கருமாண்டி செல்லிபாளையம், சேனிடோரியம், பெருந்துறையில் -638053) மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே அக்கூட்டத்தில் பெருந்துறை கோட்டத்திற்குட்பட்ட பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்தூர், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளர், அவர்களை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு.
No comments
Thank you for your comments