Breaking News

டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு


வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாலியல் மற்றும் புகையிலை மது போன்ற பழக்கங்கள் கூடாது பஸ்ஸில் பயணிக்கும் நண்பர்கள் படியில் பயணம் செய்யக்கூடாது என விருதம்பட்டு காவல்துறை உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

ஆக்ஸிலியம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்  கிறிஸ்மஸ் விழா

வேலூர் மாவட்டம்  காட்பாடி ஆக்ஸிலியம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில் ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை   கல்லூரி தாளாளர் ஆலிப் முதல்வர் ஜெயசாந்தி துணை முதல்வர்கள் சுமதி அமலா வளர்மதி மற்றும் உதவும் உள்ளங்கள் சந்திரசேகர் ஆகியோர் வழங்கினார்கள். 

இந்த விழாக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் அமுதா செய்திருந்தார்.

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲


கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட  ஏழை பெண்களுக்கு  புடவை 

வேலூர் மாவட்டம் காட்பாடி கிளித்தான் பட்டறையில் 7 ஆம்  ஆண்டு கிறிஸ்மஸ் விழா மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது 500க்கும் மேற்பட்டோர்  ஏழை பெண்களுக்கு  புடவை வழங்கப்பட்டது.



 இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்கள்  தொழிலதிபர் விநாயகம் அவர்கள் கலந்து கொண்டு புடவை வழங்கினார்.  உடன்  கருணாகரன், சேகர் ,தரணி , பாஸ்கர்  ஜே.ஜே.நகர் ஊர் நாட்டாமை முனுசாமி  இந்த விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர் முனுசாமி அவர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர் .

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲





No comments

Thank you for your comments