பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆணையர் அசோக் குமார் ஆய்வு
வேலூர்:
வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அசோக் குமார், பழைய பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை ஆய்வு செய்தனர்.
பழைய பேருந்து நிலையத்தில் 3 ஷிப்ட் பணியாளர்களை நியமித்து எந்நேரமும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
மேலும், டாஸ்மாக் இருக்கும் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிறுநீர் கழிக்க கழிப்பிடம் ஒன்று அமைத்து தருவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார், வருவாய் அலுவலர் குமரவேல், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments