மின்பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு, ஏப்.19-
மேற்பார்வை பொறியாளர், ஈரோடு மின்பகிர்மான வட்டம், ஈரோடு, தலைமையில் மின்பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.04.2022 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு செயற்பொறியாளர் / பெருந்துறைகோட்ட அலுவலகத்தில் (33/ 11 கி.வோ.துணைமின்நிலையம்வளாகம், கருமாண்டிசெல்லிபாளையம், சேனிடோரியம், பெருந்துறை-638053) நடைபெறும். எனவே அக்கூட்டத்தில் பெருந்துறை கோட்டத்திற்குட்பட்ட பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்தூர், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பெரியாளர், அவர்களை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments
Thank you for your comments