கோயில் திருப்பணிகள் மீது தவறான தகவலை பரப்புகிறார்கள்-கோயில் பணியாளர்கள் எஸ்.பி.யிடம் புகார்
காஞ்சிபுரம், ஜூலை 3:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி தலைமையில் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு கோயில்களை சேர்ந்த அர்ச்சகர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் எஸ்பி கே.சண்முகத்தை சந்தித்து கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பது..
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயில்.இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.28 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத் தளங்களில் காஞ்சிபுரத்தை சேர்ந்த இருவர் தவறான தகவலை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.அவர்கள் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எஸ்பி.கே.சண்முகத்திடம் கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி கூறியதாவது..
காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு மற்றும் தினேஷ் என்ற இருவர் சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு தினசரி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்து அர்ச்கர்களையும்,பணியாளர்களையும் மிரட்டுகிறார்கள்.அச்சுறுத்தி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார்கள். இதனால் கோயில் பணியாளர்ககள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடந்து வரும் நிலையில் தவறான தகவல்களை சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி கே.சண்முகத்தை அனைவரும் நேரில் சந்தித்து புகார் தெரிவித்துள்ளோம்.அவரும் இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.
No comments
Thank you for your comments