மேஷம் முதல் மீனம் வரை தின ராசி பலன்கள் - 04-07-2025
மேஷம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். பயணம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : ஒத்துழைப்பான நாள்.
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம்
பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் தன வரவுகள் உண்டாகும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். குண நலன்களில் சில மாற்றம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : மதிப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : துரிதம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
மிதுனம்
உறவினர் இடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த செயல்களில் ஆலோசனைகள் கிடைக்கும். கடன் விசயத்தில் சிந்தித்து செயல்படவும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். சிக்கல் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : வேறுபாடுகள் நீங்கும்.
திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
புனர்பூசம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
கடகம்
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலம் விரயங்கள் ஏற்பட்டாலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கால்நடை விஷயங்களில் பொறுமையுடன் கையாளவும். தனவரவுகள் மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணம் சாதகமாக அமையும். தேர்ச்சி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : உற்சாகமான நாள்.
பூசம் : பொறுமையுடன் கையாளவும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
சிம்மம்
உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வரவு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : மாற்றம் ஏற்படும்.
பூரம் : லாபகரமான நாள்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
கன்னி
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். புதிய நபர்களிடம் கருத்துக்களை கூறும் பொது கவனம் வேண்டும். திட்டமிட்ட சில பணிகள் முடிவதில் காலதாமதம் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நிம்மதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்
உத்திரம் : முடிவுகள் பிறக்கும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
துலாம்
உத்தியோகம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலிருந்த போட்டி, பொறாமைகள் குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் சார்ந்த செயல்களில் அலைச்சல் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகள் மூலம் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு அகலும். பக்தி வெளிப்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : பொறாமைகள் குறையும்.
விசாகம் : சோர்வுகள் அகலும்.
விருச்சிகம்
தொழில் ரீதியாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். லாபம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.
தனுசு
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உருவாகும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். தூக்கமின்மை சார்ந்த சிக்கல்கள் ஓரளவு குறையும். கீர்த்தி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : சிக்கல்கள் குறையும்.
மகரம்
விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனை மேம்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் நம்பிக்கை மேம்படும். செயல்பாடுகளில் இருந்த மந்த நிலை விலகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
உத்திராடம் : மேன்மையான நாள்.
திருவோணம் : மந்த நிலை விலகும்.
அவிட்டம் : ஒத்துழைப்பான நாள்.
கும்பம்
பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். உத்தியோக தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தவறிப் போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : முயற்சிகள் மேம்படும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
மீனம்
எதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படவும். முயற்சிகளில் சில மாற்றமான அனுபவங்கள் கிடைக்கும். சகோதர வழியில் சில விரயங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் வந்து நீங்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். கனிவு வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : நெருக்கடிகள் நீங்கும்.
ரேவதி : பேச்சுக்களில் கவனம்
No comments
Thank you for your comments