06-04-2022 அன்று மின்பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர் நாள் கூட்டம்
ஈரோடு, ஏப்.3-
ஈரோடு மின்பகிர்மானவட்டம், மேற்பார்வை பொறியாளர், தலைமையில் மின்பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர்க்கும் நாள்கூட்டம் 06.04.2022 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு செயற்பொறியாளர் / இயக்குதலும் பேனுதலும் / நகரியம் / ஈரோடு கோட்ட அலுவலகத்தில் (948EVN ரோடு, ஈரோடு-9) நடைபெறுகிறது..
எனவே அக்கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத்நகர், திண்டல், அக்ரஹாரம் மற்றும் மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தபாடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்பயனீட்டாளர்கள், மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஈரோடு மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
வெளியீடு:செய்திமக்கள்தொடர்புஅலுவலர், ஈரோடு.
No comments
Thank you for your comments