கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் அமைச்சர் சி.வெ.கனேசன்

கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட பழையபேருந்து  நிலையம், சோழநகர்,  அம்பேத்கர் நகர், ஆகிய இடங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதல்படி  திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வெ.கனேசன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி  முகாமை துவக்கி வைத்தார். 

அப்போது 2020க்கான தேசிய அளவில் ஜனாதிபதி விருதான சிறந்த சிவில் இருக்கான விருதை பெண்ணாடம் பகுதி சுகாதார செவிலியர் வேளாங்கண்ணி என்பவருக்கு பரிசு கேடயம் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து உலகத்திலே இந்தியாவில் தமிழகத்தில்தான் கொரோனா முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என கூறினார். 

அப்போது பெண்ணாடம் சோழன் நகரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் நகர செயலாளர் மகேந்திரன் மகன் பிரபாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனுக்கள் கொடுத்தனர். 

அதில் எங்கள் பகுதியில் பேரூராட்சி மூலம் மூன்று கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளதாகவும், அந்த கட்டிடங்கள் எதுவும் பயன்பாட்டில் இல்லை எனவும் மேலும் தாதங்குட்டையை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை மனு கொடுத்தனர். 

இதை வாங்கிக் கொண்ட அமைச்சர் கணேசன் அவர்கள் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் கடலூர் சுகாதார இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் மீரா, வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன், மருத்துவர் கிலாடியல், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், விஜயரங்கன் மற்றும் பெண்ணாடம் நகர செயலாளர் குமாரவேல், ஒன்றிய செயலாளர் சிவதியாகராஜன், உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments