Breaking News

திட்டக்குடி பகுதிகளில் அதிமுக 50 ஆண்டு பொன் விழா கொண்டாட்டம்

கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வேப்பூர் பகுதிகளில்  தொழுதூர், ஆலத்தூர், ரெட்டாக்குறிச்சி, திட்டக்குடி, அடரி, களத்தூர், மங்களூர், சிறுப்பாக்கம், கீழ்ஒரத்தூர், பட்டாக்குறிச்சி, கொத்தனூர், மாங்குளம், மலையனூர் ஆகிய ஊராட்சிகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்ஜிஆர் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றி கேக் வெட்டி இனிப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதாணம் வழங்கி கொண்டாடப்பட்டது.



கழுதூர் ஊராட்சியில் கிளைசெயலாளர் பாரதிராஜா தலைமையில் கட்சி கொடிஏற்றப்பட்டு 500 லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது.

புல்லூர் கிராமத்தில் கிளைகழகச் செயலாளர் முத்துகுமரேசன் தலைமையில்கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

No comments

Thank you for your comments