Breaking News

அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நட்டுவைத்து பிறந்தநாள் விழா கொண்டாடிய ஊராட்சிமன்ற தலைவர்

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சிமன்றதலைவராக கருணாநிதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும் மக்கள் பணியில் ஈடுபட்டு ஊராட்சியை முன்னெடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு விருகிறார்.

இந்நிலையில் அவரது பிறந்தநாள் விழா  ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள்  மலையனூர் தேவராஜ், மங்களூர் ராமு, மங்களூர் ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் குணசேகரன்,  இளைஞர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தலைவர் கருணாநிதி கேக்வெட்டி இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினார்.

பின்னர் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்து மாணவர்களுக்கு இணிப்புகள் வழங்கினார்.

சமூக ஆர்வலர் சரண்ராஜ் ஊராட்சிமன்றதலைவருக்கு சால்வை அணிவித்து மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணைதலைவர் ஆகாசதுரை,செயலர் ரேகா,வார்டு உறுப்பினர்கள்,சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மங்களூர் ஒன்றிய செயலாளர் பவாணி செந்தில், கடலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாசார் செல்வேந்திரன், கடலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை செயளாலர் கல்யாணசுந்தரம், மங்களூர்ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் அறிவழகன், ஆட்டோ புஸ்பநாதன், அஜித்குமார், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments