குடிமக்கள் நுகர்வோர் மன்றமும் மின் நுகர்வோர் மையமும் இணைந்து விழிப்புணர்வு கூட்டம்...
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்றமும் மாவட்ட மின்நுகர்வோர் மையமும் இணைந்து திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் மின் நுகர்வோர், சோலாரை எவ்வாறு பயன்படுத்துவது, நுகர்வோர் அமைப்பு என்றால் என்ன போன்ற விஷயங்களை கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் முத்தழகி வரவேற்பு ஆற்றிட அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராஜவேல் தலைமை உரையாற்றிட ஃபெட்காட் இந்தியா தேசிய செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட மின் நுகர்வோர் மைய இளநிலை ஆலோசகர் சி.கே.ராஜன், சிசிஐயின் மண்டல செயலாளர் அம்பிகாபதி உள்ளிட்டோர் மாணவர்களிடையே விழிப்புணர்வு சிறப்புரையாற்றி விழிப்புணர்வு வாயிலாக கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
இறுதியில் விலங்கியல் துறை தலைவர் டாக்டர் செந்தில்குமார் நன்றி உரையாற்றினார்.. இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments