கோவை அத்லெட்டிக் கிளப் ,பார்க் இன்ஸ்டியூசன்ஸ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி நிர்வாகமும் இணைந்து 24 வது கோடைகால பயிற்சி முகாம்..!

கோவை 25 ஆம்  வெள்ளி விழாவை முன்னிட்டு நேரு உள் விளையாட்டு அரங்கில் கோவை அத்லெட்டிக் கிளப், பார்க் இன்ஸ்டியூசன்ஸ் மற்றும் எஸ் எஸ் வி எம் பள்ளி நிர்வாகமும் இணைந்து 24 வது கோடைகால பயிற்சி முகாமின் தடகளப் போட்டிகளை முன்னாள்  தமிழ்நாடு தடகள சங்க செயலர் திருநீலசிவலிங்க சுவாமி நினைவாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியினை கேஏடிசி சேர்மன் ஜக்குவாட்ஸ் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போாட்டிகளை துவக்கி வைத்தார்.இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து 8 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட  பள்ளி  மாணவ மாணவியர்கள் 1500 கும் மேற்பட்டோர் போட்டிகளில் பங்கேற்றனர். முன்னதாக மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியினை   மாவட்ட தடகள சங்கம் துணை தலைவர் சரவணா காந்தி மற்றும் அமிர்த் ஆர்கானிக் ராஜேஷ்  ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்கள்.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழாவில் பார்க்  இன்ஸ்டிடியூசன்ஸ் அனுசியா ரவி,  கோவை அத்லெட்டிக் கிளப்  தலைவர்  சுமன் மற்றும் கோவை ரமேஷ் டாக்டர் ஜான் சிங்கராயர் சம்சுதீன் மூத்த பயிற்சியாளர் நந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள்.



இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவை மாவட்ட தலைவர் சீனிவாசன் சிறப்பாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் பயிற்சியாளர்கள் பெறறோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments