காஞ்சிபுரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மையம் - கலெக்டர் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம், ஜூலை 4:
தமிழ்நாடு மாநில ஊரக சுகாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மையமான மதி அங்காடியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மதி அங்காடியை ஆட்சியர் திறந்து வைத்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள், சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்,சணலால் செய்யப்பட்டபைகள், காகிதக் கூழ் மற்றும் களிமண் பொம்மைகள், காட்டன் சுடிதார் மற்றும் பட்டுப்புடவை வகைகள், மூலிகைப் பொருட்கள் ஆகியனவற்றையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
மதி அங்காடி திறப்பு விழாவில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments