Breaking News

உலக கேன்சர் சர்வைவர்ஸ் தினம் "கேன்சர் பவுண்டேசன் சார்பில் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி.!

உலக கேன்சர் சர்வைவர்ஸ் தினம் கோவை சுங்கம் பகுதியில் இயங்கி வரும் கேன்சர் பவுண்டேசன் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாழ்க்கையை கொண்டாடுதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இதில் ஜெனடிக் இந்தியா பிரைவெட் லிமிடெட் அட்மின் பொது மேலாளர் சரவணன் , பிஎஸ்ஜி மருத்துவமனை உடலியல் துறை மருத்துவர் மோகன் , கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இன்பர்மேசன் டெக்னாலஜி துறை பேராசிரியர் சிவரஞ்சனி கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் பாலாஜி, அறங்காவலர் ஜோதி ஜுமானி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். இது குறித்து மருத்துவர் மோகன் கூறுகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள் அவர்கள் அதிலிருந்து விடுபட போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில் இல்லை மேலும் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு கண்டுபிடித்தால் குணமடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றார்.



மேலும் பொருளாதாரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவர்கள் இதற்கு தீர்வுகாண புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகள் அதிகரிக்க வேண்டும் .ஆராய்ச்சிகள் அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவ ரீதியாக விலை குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேசன் பூர்ணிமாகுமார் மற்றும் அலுவலர்கள் , புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வாழ்பவர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments