Breaking News

கல்வித் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர் மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி - எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் :

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா ஜூலை 15ஆம் தேதி நாடு முழுவதும் கல்வித் திருவிழாவாக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 




அந்த வகையில்  காஞ்சிபுரம் வட்டார ஐக்கிய நாடார் சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய நாடார் வாலிபர் சங்கம் காஞ்சிபுரம்  நாடார் மகாஜன சங்கம், இணைந்து நடத்தும் பெருந்தலைவர் காமராஜரின்  123 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கல்வித்திருவிழா பேச்சுப்போட்டி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள காமராஜர் திருமண மாளிகையில்  நடைபெற்றது. 

காஞ்சிபுரம்  நாடார் மகாஜன சங்கம் மாவட்ட தலைவர் டி. கார்த்தீசன் தலைமையில் நாடார் மகாஜன சங்கம்  சென்னை மண்டல தலைவர் ஏவிஎஸ் மாரிமுத்து நாடார் முன்னிலையில்  நடைபெற்ற கல்வித் திருவிழா பேச்சு போட்டியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றில் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியினை துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்விக்கண் திறந்த காமராஜர் புகழை போற்றும் வகையில் பேசி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர் .

பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

விழாவில்  காஞ்சிபுரம் வட்டார ஐக்கிய நாடார் சங்கம்  தலைவர் T.கார்த்தீசன் நாடார், செயாளர் M. ராமகிருஷ்ணன் நாடார், பொருளாளர் S.காத்தலிங்கம் நாடார், செயற்குழு உறுப்பினர் A.C. குமார்,  காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய நாடார் வாலிபர் சாங்கம் தலைவர் A.பழனிச் செல்வம் நாடார், செயலாளர்  SM.பால முருகன் நாடார், பொருளாளர் R.P. செல்வக்குமார் நாடார், நாடார் மகாஜன  சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளார் R. பொன் ராஜ் நாடார்  காஞ்சிபுரம் மாநகராட்சி செயலாளர்  S.வீரபாண்டி யன் நாடார். உள்ளிட்ட நாடார் சங்க நிர்வாகிகளும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகளும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments