Breaking News

புதிய நகர் நல மையம் திறப்பு விழா ...!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


அதனைத்தொடர்ந்து கோவை மாநகராட்சியில் 21 புதிய சுகாதார நிலையங்கள் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டு அதன் திறப்புவிழா நடைபெற்றது.


அதனைத்தொடர்ந்து கோவை செல்வபுரம் பகுதி 78 வது வார்டுக்குட்பட்ட வடக்கு ஹவுசிங் யூனிட்டில் புதிய நகர் நல மையம் திறப்பு விழா செல்வபுரம் பகுதி செயலாளர் கேபிள் மணி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



பின்னர் மருத்துவர் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிக்கு பரிசோதனை செய்வதை மேற்பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர்  கூறுகையில் இப்பகுதியில் வாழும் அனைத்து ஏழை மக்களும் இங்கு இலவசமாக வைத்தியம் பார்க்கலாம், இங்கு தினமும் மருத்துவர் பணியில் இருப்பார். மேலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நமது முதல்வர் இன்று தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார் என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில்78 வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி, 78,79, வார்டு செயலாளர்கள் அறிவழகன், இப்ராஹிம், தொண்டாமுத்தூர் தியாகு, 77வது வார்டு பொறுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பசீர், விமல் உதவி பொறியாளர் ஏஞ்சலினா மற்றும் மருத்துவர் , செவிலியர்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments