விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி ஊராட்சியில் 77ஏ பழைய ஏரி பாசன விவசாயிகள் மற்றும் 1 வது வாய்க்கால் பாசன விவசாயிகள் இணைந்து பழைய ஏரி பாசன சங்கம் தொடக்க விழா மற்றும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழக விவசாயிகள் மக்கள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
தமிழர் நீதிக்கட்சி மாவட்ட துணைச்செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒன்றியதுணை செயலாளர் சகாதேவன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி நிறுவனர் தயா.பேரின்பம் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மிளகாய் செடி, கலைவெட்டி 40, கதிர் அருவாள் 40, மண்வெட்டி 20 மொத்தம் 100 வேளான் உபகரணங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னால் ஊராட்சி மன்றதலைவர் அதிமுக கிளை செயலாளர் தனராசு, திமுக சுப்பிரமணியன், சிபிஐ மாவட்ட குழு சிலம்பரசன், மக்கள் நீதி மய்யம் கட்சி செயலாளர் விவேகானந்தன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
முடிவில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய மாணவரணி தலைவர் ராஜன் நன்றி கூறினார்.
Post Comment
No comments
Thank you for your comments