Breaking News

குடிமைப் பணிகள் தேர்வு - கலெக்டர் கலைச்செல்வி மோகன் முக்கிய அறிவுரைகள்

12.07.2025 முற்பகல்  ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதனையொட்டி (தொகுதி -IV பணிகள்) தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் முக்கிய அறிவுரைகள் தெரிவித்துள்ளார். ‘

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் முக்கிய அறிவுரைகளாவது, 

1. விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 9.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். காலை 9.00 மணிக்கு OMR விடைத்தாள்கள் வழங்கப்படும் மற்றும் வினாத்தாள்கள் காலை 9.15 மணிக்கு வழங்கப்படும். காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கப்படும் மற்றும் 12.30 மணிக்கு தேர்வு நிறைவடையும். மேலும், தேர்வர்கள் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

2. விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை/ கடவுச்சீட்டு(PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண்(PAN CARD)/ வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.

3.  தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கைகடிகாரம் (Electronic Watches), புளூடூத் (Bluethooth) போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைகடிகாரங்களை(Simple Analogue Watches) பயன்படுத்தலாம்.

4. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.    

No comments

Thank you for your comments