வாலாஜாபாத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரும்,வாலாஜாபாத் அருகே சங்கராபுரத்தில் செயல்பட்டு வரும் ஆதி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியும் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பேரணி தொடக்க விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் சரண்ராஜ் பேரணி தொடக்க விழாவிற்கு தலைமையும்,முதல்வர் தேவராஜூலு முன்னிலையும் வகித்தனர்.தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினனட் சக்திவேலு அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி சார்லஸ் சாம் ராஜதுரை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணியில் போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் ஆதி பொறியியல் கல்லூரி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments