Breaking News

நாய் குட்டியால் நேர்ந்த விபரீதம் - பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் :

செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் திருவீதிப்பள்ளம் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் மகேஷ்வரன், கிரிஜா தம்பதி. மகேஷ்வரன் மதுரவாயல் காவல் நிலையத்திலும், கிரிஜா செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் தலைமைக் காவலர்களாகப் பணியாற்றி வருகின்றறனர். 

இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனராம். குழந்தை இல்லாததால், நாயை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் முதலில் 5 குட்டிகளையும், பின்னர் 2 குட்டிகளையும் ஈன்ற நிலையில் இரண்டாவதாக பிறந்த 2 குட்டிகளும் வீட்டுக்கு அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளது.

இரு குட்டிகளும் உயிரிழந்ததால் கணவர் தொலைபேசியில் இரு குழந்தைகளை சாகடித்து விட்டாயே என கைப்பேசியில் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த கிரிஜா (42), காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் கணவர் மகேஷ்வரன் மனைவியிடம் தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றறபோது அவர் கைப்பேசியை எடுக்கவில்லை. உடனடியாக வீட்டுக்கு அருகில் உள்ள உறறவினர்களுக்கு தகவல் தெரிவித்து பார்த்தபோது அவர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸôர் வழக்குப் பதிவு செய்து கிரிஜாவின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments

Thank you for your comments