Breaking News

மெர்லிஸ் நட்சத்திர ஓட்டல் துவக்கம்..!

இந்தியாவின்  முன்னனி  நிறுவனமான, ராஜ் பார்க்  ஒட்டல்ஸ்  நிறுவனம் தனது மெர்லிஸ் 5 நட்சத்திர  ஓட்டலை அதி நவீன சொகுசு வசதிகளுடன்  கோவையில் துவங்கியது.



இதுகுறித்து  ஓட்டல் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் சந்தீப் தேவராஜ்,இயக்குனர் திவ்யா,பொது மேலாளர் மது சூதனன் ஆகியோர்  செய்தியாளர்களிடம் பேசினர்.அப்போது அவர்கள் பேசியதாவது,கோவையின் முக்கிய பகுதியான அவினாசி சாலையில்,விமான நிலையத்திற்கு அருகில்,மெர்லிஸ்  ஓட்டல் அமைந்துள்ளது. 



ஒவ்வொரு அறைகளிலும், தனிப்பட்ட பணிகளுக்கென  பிரத்யேக பர்னிச்சர் போன்ற நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. மெர்லிஸ் ஓட்டல்ஸ்  ஆடம்பரத்தின் அடையாளமாக கோவைக்கு வரும் பெரு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை தெரிவித்த அவர்,ஒரே நேரத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கென கீழ் மற்றும் தரைத்தளங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



குறிப்பாக  குடும்ப விழாக்கள் மற்றும்  நிறுவனங்களின் பெரிய மற்றும் சிறிய  நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக 50 லிருந்து 1, 600 பேர் அமரக்கூடிய வகையில் பத்து வகையான  ஹால்கள் இருப்பதாகவும்,உயர் தர வசதிகளுடன் கூடிய பஃபே உணவகம் ஆலக்காட் என ஐந்து வகையான உணவகங்களில்  உலகளாவிய பல்வேறு வகையான சிக்னேச்சர்  சிறப்புகளுடன் உணவுகள் பரிமாறப்படும் என தெரிவித்தார்.



மேலும், உயர்ந்த தரத்திலான மது கூடம்,நவீன வசதிகளை கொண்ட உடற்பயிற்சி மையம், நீச்சல் குளம், கருத்தரங்க கூடம் போன்ற வசதிகளும் இருப்பதாக  கூறினர்.

No comments

Thank you for your comments