Breaking News

15-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் விநியோக நிறுத்தம்

திருவள்ளூர்

பராமரிப்பு பணிகள் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெங்கல், கோட்டகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் 15.07.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் /இ&ப தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் பகுதிகள் பின்வருமாறு:

📍 பெரியபாளையம் துணை மின் நிலையம் - 11 KV வெங்கல் மின்பாதை:

  • வெங்கல்
  • எர்ணாகுப்பம்
  • பாகல்மேடு
  • காதர்வேடு
  • செம்பேடு
  • மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள்

📍 பண்டிகாவனூர் துணை மின் நிலையம் - 11 KV கோட்டகுப்பம் மின்பாதை:

  • கோட்டகுப்பம்
  • மேட்டுபாளையம்
  • மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்

இந்த பராமரிப்பு பணிகள் அவசியமானவை என்பதால், மின்விநியோக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இதனை முன்கூட்டியே கவனத்தில் கொண்டு, மின்சாரத்தால் தொடர்புடைய தேவைகளை முன்னதாகவே நிறைவேற்றிக் கொள்ளுமாறு மாவட்ட மின் பகிர்மானத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

📝 செய்தி வெளியீடு –
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவள்ளூர் மாவட்டம்

No comments

Thank you for your comments