Breaking News

தீபாவளி ஸ்பெஷல் - மதுர் வடை




தேவைப்படும் பொருட்கள்

  • அரிசி மாவு, 
  • ரவை, 
  • வெங்காயம், 
  • பச்சை மிளகாய், 
  • கறிவேப்பிலை, 
  • பெருங்காய தூள், 
  • உப்பு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவும், சிறிதளவு ரவையையும் சேர்த்து கலக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

இந்த கலவையை சூடான எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சப்பாத்தி மாவின் மென்மையான பதம் போன்று மாவை தயாரிக்கவும்.

தற்போது மாவு தயாரானவுடன் அதனை உருண்டை பிடித்து தட்டை போல் தட்டி கொள்ளவும்.

பின்பு வெங்காயம் பொன்னிறம் வருமளவிற்கு எண்ணெயில் நன்கு பொறிக்கவும். மிகவும் மொறுமொறுப்பாக வேண்டுமென்றால் நீண்ட நேரம் எண்ணெய்யில் பொரிக்கவும். தயாரித்த மதுர் வடையை பொருத்தமான தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.


No comments

Thank you for your comments