Breaking News

பச்சையப்பன் கல்லூரியில் ரத்ததான முகாம்

காஞ்சிபுரம், ஜூலை 11:

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தன்னார்வ ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை கல்லூரி முதல்வர் ப.முருககூத்தன் தலைமையில் நடைபெற்றது.



காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்,அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, டெம்பிள் சிட்டி சுழற் சங்கம் ஆகியன இணைந்து கல்லூரி வளாகத்தில் தன்னார்வ ரத்ததான முகாமை நடத்தினார்கள்.

முகாம் தொடக்க விழாவிற்கு சுழற் சங்க ரத்ததானப் பிரிவின் மாவட்ட தலைவர் எம்.கே.ஞானஒளி,சுழற் சங்க மாவட்ட தலைவர் என்.ஸ்டீபன்,செயலாளர் எம்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அலுவலர் வி.அருள் வரவேற்று பேசினார்.புற்றுநோய் மருத்துவமனையின் ரத்தவங்கி அலுவலர் ச.போஸ்கோ பிரேம்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 74 பேரிடம் ரத்தம் சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கல்லூரியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ந.பழனிராஜ் உட்பட பலரும் ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள்.நிறைவாக என்.வித்தக வேந்தன் நன்றி கூறினார்.முகாமில் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments