Q2 சினிமாஸ் நிறுவனம் சார்பில் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு - போட்டிகள்

கோவை :

கோவை மாவட்டம்  ஈச்சனாரி இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் Q2 சினிமாஸ் நிறுவனம் சார்பில் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும்   விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் மிஸ்டர் கோயமுத்தூர் போட்டிகள்  நடைபெற்றது.


மிஸ்டர் கோயமுத்தூர் போட்டிக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.இதில்

மாநில  அளவில் நடைபெற்ற ஆண்களுக்கான மாடலிங் போட்டியில் கோவையை சேர்ந்த பெரியசாமி ராமன் வெற்றி பெற்றார். 

நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

இன்றைய இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஆரோக்கியத்தின் மீது ஈடுபாடு இல்லாமல் சத்துள்ள உணவு பழக்கவழக்கங்களை குறைத்து ஃபாஸ்ட் ஃபுட் போன்ற திட மற்ற உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் தீயபழக்கங்களினால் தங்களது ஆரோக்கியமான வாழ்க்கையையும் இழந்து விடுகின்றனர்.

எனவே உடல்நலம் என்பது மிகவும் முக்கியமானது அனைவரும் திடமான உணவை உட்கொண்டு உடற்பயிற்சியை முறையாக செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

No comments

Thank you for your comments