Breaking News

அரசு நிலத்தில் மசூதி கட்டிருப்பதாக இடிக்க கோரி வட்டாட்சியர் அளித்த மனுவை ரத்து செய்ய கோரி மசூதி நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு


காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் மஸ்ஜிதே குப்தா என்னும் பள்ளிவாசல் 45 -ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது, சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இஸ்லாமியர்கள் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் குன்றத்தூர் வட்டாட்சியர் இப்பள்ளிவாசல் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்டுள்ளதாக கூறி மசூதி பகுதி இருக்கும் மக்களை வெளியேற்றி மற்றும் இடிக்க  நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் விதிகளை மீறி வட்டாட்சியர் தனி நபர் புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள மசூதியை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக  தெரிகிறது.   

இந்த பள்ளிவாசலுக்கு எதிராக இடிக்க  முன்பாக நோட்டீஸ் வழங்கியிருப்பதை ரத்து செய்ய கோரி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  ஆதனூர் மசூதியில் நிர்வாகிகள்  வருவாய் அலுவலர் வெங்கடேசன் இடம் மனு அளித்தனர், மனு மீது உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

No comments

Thank you for your comments