2025-26 ஆம் கல்வியாண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கை அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
வ.எண்
| கல்லூரியின் பெயர்
| மொத்த இடங்கள்
|
1. | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பெரும்புதூர், சென்னை-69 | 240 |
2. | புரட்சித்தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , உத்திரமேரூர் - 603406 | 760 |
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ/ மாணவியர்களுக்குப் 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்கள் மூலமாக ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது.
'நான் முதல்வன் திட்டம்' மூலம், வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் இலவசப் பேருந்து வசதிகளும் உள்ளன. திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2025 முதல் 27.05.2025 பதிவுசெய்யலாம்.
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments