Breaking News

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி எழிலரசன் - கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமனம்!

சென்னை :

இன்று (13.03.2025) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன்   வாழ்த்து பெற்றார். கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் "கொள்கைப் பரப்புச் செயலாளராக" அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எழிலரசன், மாணவர் அணிச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  மேலும், திமுக மாணவர் அணித் தலைவராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை அப்பொறுப்பில் இருந்து விலக்கி, மாணவர் அணிச் செயலாளராக துரைமுருகன் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இன்று (13.03.2025) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன்   வாழ்த்து பெற்றார்.

கட்சித் தலைமை நியமனத்தின் பின்னணி:

எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன்,  நீண்ட ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளுக்குச் சிறப்பாக பணியாற்றி வந்தவர். அவரது தன்னலமற்ற சேவை, பொதுமக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றுள்ளது. அவர் திராவிட இயக்கத் தொண்டராக தன்னுடைய பணிகளை தொடர்ந்து சிறப்பாக செய்து வரும் நிலையில், கழகத்தின் கொள்கை பரப்பை மேலும் வலுப்படுத்தும் பொறுப்பை தலைமை அவரிடம் ஒப்படைத்துள்ளது.

முதல்வர் - கழக தலைவரின் பாராட்டு:

முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன்,  கட்சிக்கு ஆற்றிய சேவையை பாராட்டி, புதிய பொறுப்பை சிறப்பாக மேற்கொண்டு செயல்பட வேண்டுமென்றும், கழகத்தின் கொள்கைகளை மக்களுக்கு விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எம்எல்ஏ  சி.வி.எம்.பி எழிலரசன் அவர்களின் பதில்:

புதிய பொறுப்பு குறித்து எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன் தெரிவித்ததாவது, இது மிகப் பெரிய பொறுப்பாக இருப்பதை உணர்வதாகவும், கழகத் தலைமையின் நம்பிக்கையை சரியாக நிறைவேற்றி, தமிழக மக்கள், கழக தொண்டர்கள், மற்றும் கழக நேயர்கள் அனைவருக்கும் தன்மையான சேவை புரிய உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்சி தொண்டர்களின் மகிழ்ச்சி:

இந்நியமனம் கழகத்தினரிடமும், தொண்டர்களிடமும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன், கட்சியின் கொள்கைகளை வலுவாகவும், தெளிவாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய திறன் பெற்றவர் என்பதால், அவரின் நியமனம் வரவேற்கத்தக்கது என திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நியமனம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புத் திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

மாணவர்களுடன் உறவாடிக் கொண்டிருந்த எனக்கு, மக்களிடம் உரையாற்றுகிற வாய்ப்பினை, கழகத் தலைவரின் குரலாய், இளந்தலைவரின் எண்ணத்தை ஒலிக்கின்ற வகையில் கொள்கை பரப்புச் செயலாளர் எனும் உன்னத பொறுப்பினை வழங்கிட்ட @arivalayam  கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin  அவர்களுக்கும், என்றென்றும் வழிகாட்டியாய் விளங்கும்  @dmk_youthwing  செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அன்பிற்குரிய இளந்தலைவர் திரு. @Udhaystalin  அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! . இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


🔥இதையும் படிக்க-Don't Miss:

Click here 👉2025 சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் & பரிகாரங்கள் 

No comments

Thank you for your comments