கோவை மாவட்டம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் அலுவலக மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி செயலர் பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் சந்திரசேகர், கிராமவள பயிற்றுநர் அமுதாதேவி, கலந்து கொண்டு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 2016 - 2017 முதல் 2021- 2022 ஆண்டுகள் வரையிலான பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்து நேரில் சமூக தணிக்கை செய்து அதன் அறிக்கையை கூட்டத்தில் சமர்ப்பித்து வாசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தீபன்குமார், ராமன், மோகன், பட்டீஸ்வரிமருதாச்சலம், ப்ரீத்தி வெங்கடேஷ் மற்றும் பயனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments