காவல்துறை விதிமுறைகளை போலீசார் கடைபிடிக்க வலியுறுத்தல்..!
கோவை போக்குவரத்து காவல்துறை காவலர்கள் சாலைகளில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடும் போது சீருடை மற்றும் தொப்பி அணிந்திருக்க வேண்டும். மேலும் பொதுமக்களை வா,போ என்று ஒருமையில் பேச கூடாது. வாகனத்தின் சாவியை அத்துமீறி எடுக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் காவல்துறையின் சார்பாக உயர் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் டவுன்ஹால் பகுதி பைசன் கார்னரில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு காவலர் ஒருமையில் பேசியும் நடு ரோட்டில் வாகனத்தின் சாவியை எடுப்பதாகவும் பொதுமக்கள் பலரும் புலம்புகின்றனர்.
பொதுமக்களுக்கு காவல்துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கும் காவல்துறை உயரதிகாரிகள் இது போன்ற காவலர்களையும் கண்டித்து அறிவுரைகள் வழங்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
No comments
Thank you for your comments