Breaking News

திருநின்றவூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை – ₹5000 லஞ்சத்துடன் பில் கலெக்டர் சிக்கினார்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில், இன்று (07.03.2025) காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வருவாய் உதவி ஆய்வாளர் சண்முகம், ₹5000 லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.



கடந்த நான்கு மாதங்களாக, திருநின்றவூர் நகராட்சியில் பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாக, குறிப்பாக கோடி கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு கட்டிட அனுமதிகள் வழங்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கும், முதல்வர் தனிப்பிரிவிற்கும் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நகராட்சியில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனைக்கிடையில், வரி செலுத்த வந்த ஒருவரிடம் ₹15,000 பேரம் பேசி, முதல் கட்டமாக ₹5000 பெறும் போது, சண்முகம் பிடிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட முறையை ஆய்வு செய்து, இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விசாரணை தொடருகிறது.

இந்த ஊழல் தொடர்பாக, முன்னாள் ஆணையர் அருள், நகராட்சி கூடுதல் இயக்குநர் விஜயகுமார், முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமாரி ஆகியோரும் சிக்கக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments