வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்

வேலூர் : 

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் (Monthly Crime Review Meeting)  நடைபெற்றது. 


இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வழக்கமான குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம், குட்கா, கஞ்சா மற்றும் மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாக குறைக்க குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிளை குண்டர் தடுப்பு சட்டதின் கீழ் அடைக்கப்பட வேண்டும்.

இரவு ரோந்து மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மதுவிலக்கு, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க 06 மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் நகைக்கடைகள் உள்ள பகுதிகளில் CCTV  கேமராக்களை அதிகப்படுத்த வேண்டும், பள்ளி/கல்லூரிகளுக்கு அருகே அமைந்துள்ள கடைகளில் போதைப்பொருட்கள் தொடர்பாக Anti Drug Committee உடன் இணைந்து சோதனைகளை தீவிரப்படுத்தவும், POSCO, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், SC/ST வழக்குகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அவசர உதவி எண் 100-க்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும் எனவும் வரும் காலங்களில் குற்றங்கள் மற்றும் விபத்துகள் நடைபெறாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

No comments

Thank you for your comments