வேலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.53 சதவீதம் தேர்ச்சி
வேலூர் :
வேலூர் மாவட்டத்தில் 2023-2024 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.53 சதவீதம் மாணவ-மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மார்ச்/ ஏப்ரல் 2024, 12 ஆம் பொது தேர்வில் 138 பள்ளிகளிலிருந்து 6032 மாணவர்களும், 7503 மாணவியர்களும் தேர்வு எழுதினார்கள். இதில் 5393 மாணவர்களும், 7131 மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 92.53 சதவிகிதமாகும்.
28 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியினை பெற்றுள்ளனர். இதில் 2 அரசு பள்ளிகளும் அடங்கும். மாணவர்களை காட்டிலும் மாணவியர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89%, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 95% ஆகும்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3.53% தேர்ச்சி விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த 2022-2023 கல்வியாண்டில் 37-வது இடத்திலிருந்து, 2023&2024 ஆம் கல்வியாண்டில் 30 வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
No comments
Thank you for your comments