தி ஐ ஃபவுண்டேஷன் சார்பில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி
வேலூர்:
உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தினை (மார்ச் 9-15, 2025) முன்னிட்டு, வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டியில் இயங்கி வரும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் இன்று (மார்ச் 8) விழிப்புணர்வு பேரணி பிரமாண்டமாக நடைபெற்றது.

டிஐஜி சண்முகசுந்தரம் தலைமை
இந்த விழிப்புணர்வு பேரணிக்கு டிஐஜி சண்முகசுந்தரம் தலைமை தாங்கி கொடி அசைத்து நிகழ்வை தொடங்கி வைத்தார். பேரணிக்கு வருகை தந்த டிஐஜிக்கு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை பொது மேலாளர் உலகநாதன்பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதில் ஆன்மீக தொழில் அதிபர் துளசிராமன், வெல்கம் பவுண்டேஷன் நிறுவனரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவருமான டாக்டர் கா.குமார், தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மாதவி, பொது மேலாளர் உலகநாதன், கிளை மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியில் விபி காலேஜ் ஆஃப் பாரா மெடிக்கல் சயின்ஸ் மாணவ மாணவிகள், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி உமன்ஸ் ஸ்கூல் ஆஃப் நர்சிங் மாணவிகள் உள்ளிட்ட மாணவர்கள், மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தலைமை மருத்துவர் டாக்டர் மாதவி தெரிவித்தாவது,
கண் நீர் அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்து, இந்த நோய் காலத்திற்கு ஏற்ப கண் பார்வையை பாதிக்கக்கூடியதாக இருப்பதால், அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, விருதம்பட் முன்பாக தொடங்கப்பட்டு பாலாறு பாலம் வழியாக கிரீன் சர்க்கிள் வரை சென்று, பின்னர் யூ-டர்ன் செய்து மீண்டும் மருத்துவமனை முன்பாக நிறைவு பெற்றது.
பேரணியின் முக்கியத்துவம்
இந்த நிகழ்வு கண் நீர் அழுத்த நோய் தொடர்பான விழிப்புணர்வை சமூகத்திற்கு பரப்ப வழிவகுத்தது. பொதுமக்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, முறையான கண் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் கண் பார்வையை பாதுகாக்கும் எண்ணத்தில் ஈடுபட்டனர்.
உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, வேலூர் மாவட்டம், விருதம்பட்டியில் இயங்கி வரும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பரிசோதனை
கண் நீர் அழுத்தம் (Glaucoma) காலப்போக்கில் பார்வை இழப்பிற்கு காரணமாக அமையக்கூடிய ஒரு நிலையாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இது அதிக ஆபத்து என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே இதை கண்டறிந்து தடுப்பது முக்கியமானது என்பதால், இந்த இலவச பரிசோதனை முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, மருத்துவமனைக்கு நேரில் வருபவர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டு, தகுந்த ஆலோசனைகளை பெறலாம். கண் பார்வையை பாதுகாக்கும் இந்த சிறப்பான முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில், எதிர்காலத்திலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments