விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் மீண்டும் குல தொழில் திட்டத்தை புகுத்துவதை எதிர்த்து லோக் ஜன சக்தி கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
காஞ்சிபுரம் :
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் மீண்டும் குல தொழில் திட்டத்தை புகுத்துவதை எதிர்த்து லோக் ஜன சக்தி கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ஏக மனதாக ஏற்கப்பட்டது.
தமிழக லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் இளைஞர் அணி தலைவர் காசிமாறன் வரவேற்புரை ஆற்ற , தலைமை பொதுச் செயலாளர் பிரபாகர் 12 தீர்மானங்களை செயற்குழு கூட்டத்தில் வாசிக்க ஏக மனதாக ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாநில தலைவர் வித்யாதரன் பேசுகையில் சமையல் வேலைவாய்ப்பு சிலிண்டர் விலையை குறைப்பதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதே வேலையில் நீட் தேர்விற்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் , பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் , சந்திராயன் உள்ளிட்ட வெற்றிக்கு பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு செயற்குழு பாராட்டு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
மணிப்பூர் கலவரத்திற்கு பாரத பிரதமர் நேரில் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டது போல் தமிழகத்தில் நடைபெறும் வன்கொடுமை ஆணவக் கொலை மற்றும் கோயில் நுழைவுகளுக்கும் ஏற்படும் நிகழ்வுகளுக்கும் நேரில் செல்ல முதல்வர் முனைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதேபோல் மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பயனாளிகள் எந்த ஜாதிகளை சேர்ந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருப்பது குலகல்வியை ஆதரிப்பது போல் உள்ளதால் அதனை நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டத்திற்கும் செயற்குழு பாராட்டு தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு 18 மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் லோகநாதன் நன்றி உரை தெரிவித்தார்.
No comments
Thank you for your comments