Breaking News

காஞ்சிபுரத்தில் தீயணைப்புத்துறையினருக்கு பேரிடர் கால உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறையினருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை வழங்கினார்.




தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேரிடர் காலங்களில் உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

எனவே காஞ்புரம் மாவட்ட தீயணைப்புத்துறையினருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

தலைக்கவசம்,பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள்,உயிர் காக்கும் மிதவைகள், புவியிடங்காட்டி (ஜிபிஎஸ்) மரம் அறுப்பான்கள், வழிகாட்டி விளக்குகள், கொசுவலைகள், முதலுதவிப் பெட்டி, தீயணைப்பான்கள் மற்றும் கூடாரம் அமைக்கும் பொருட்கள் ஆகியன ரூ.18.50லட்சம் மதிப்பிலானவற்றை ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சத்யா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி உட்பட தீயணைப்பு அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments