Breaking News

கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா பணிகளை துவக்கி வைத்த ஆட்சியர், எம்எல்ஏ.

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை துவக்க விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் , எம் எல் ஏ துவக்கி வைத்தனர்.


தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த தினம் அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

இதற்கான விழா நடைபெறும் இடமாக காஞ்சி பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தினை தேர்வு செய்து உள்ளனர்.

இந்நிலையில் விழா முன்னேற்பாடு பணிகளை துவக்க இன்று மாலை பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜைகளுடன் பணிகளை துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண் சமன்படுத்தும் பணி துவங்கி உள்ளது. இதேபோல் பந்தல் அமைக்கும் பணிக்கான பணிகள் துவங்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்றன.

No comments

Thank you for your comments