Breaking News

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற நேர மேலாண்மை முக்கியம் – மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி உரை

காஞ்சிபுரம்:

ஏழை மற்றும் எளிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் சிறந்த பணியில் சேர வேண்டும் என்பதே நம் நோக்கமென, மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.


போட்டித் தேர்வுகளுக்கு நேர மேலாண்மை மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட்டு , ஏழை எளிய மக்களுக்கு செயலாற்றும் வகையில் சிறந்த பணி பெற வேண்டும் என மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி காஞ்சிபுரம் பேட்டி அளித்தார்.

முன்னாள் வாலாஜாபாத் ஒன்றிய குழு உறுப்பினரும், ஓ.பி.எஸ் அதிமுக அணி மாவட்ட செயலாளருமான ஆர்.வி.ரஞ்சித் குமார் ஆண்டுதோறும் அவரது ஒன்றிய குழு பகுதிகளான முத்தியால்பேட்டை, களியனூர் , வள்ளுவபாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்குவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஆர்.வி. ரஞ்சித் குமார் தலைமையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனமான சைதை துரைசாமி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். 

மேலும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியான களியனூர் பகுதியில் சமுதாயக் கட்டிடம் கட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை கிராம ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து விழாவில், மாணவர்களுக்கு காண கல்வி அவசியம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

 இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது , தற்போது அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கும் நிலையில் , தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் ஆன்லைன் வசதி கொண்டு இலவசமாக பயிற்சி பெறலாம் எனவும், ஒருவர் அரசு போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் நேரமே அவர்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டும். 

அதன் மூலம் மட்டுமே மிகச்சிறந்த பணியை ஓராண்டு அல்லது இரண்டு வருடங்களுக்குள் பெற்று மக்களுக்கு சேவை செய்ய முடியும். 

எனவே உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு நேர மேலாண்மையும் கடைபிடித்து போட்டி தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய உறுப்பினர் பிரேமா ரஞ்சித் குமார், செய்தி ஆசிரியர் மருதுஅழகு முத்துராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்பழகன்,  வடிவுக்கரசி ஆறுமுகம் , பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

 

No comments

Thank you for your comments