கொலை முயற்சி வழக்கில் நான்கு குற்றவாளிகள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிள்ளையார்பாளையம், மந்தைவெளி தெருவைச் சேர்ந்த விஜய் ( 23 ) த / பெ.அண்ணாமலை, என்பவர் நேற்று ( 06.07.2022 ) மதியம் சுமார் 12.00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் மடம் தெருவில் உள்ள VSMS திருமண மண்டபம் அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்விரோதம் காரணமாக 

1 ) தியாகு ( எ ) தியாகராஜன் ( 32 ) த / பெ.காசி, எம்.ஜி.ஆர், நகர் . தாயார்குளம், காஞ்சிபுரம், 

2 ) வடிவேல் ( 36 ) த / பெ.சோலைமலை, எம்.ஜி.ஆா, நகர், தாயார்குளம், காஞ்சிபுரம், 

3 ) குமரேசன் ( 64 ) த.பெ.நடராஜன், மடம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் மற்றும் 

4 ) ஸ்ரீதர் ( எ )  குள்ள ஸ்ரீதர் ( 30 ) த / பெ.பெருமாள், எம்.ஜி.ஆர், நகர், தாயார்குளம், மேற்கு காஞ்சிபுரம் ஆகிய நால்வரும் பயங்கர ஆயுதங்களுடன் விஜய் மற்றும் அவரது நண்பரை துரத்திச் சென்று தாக்க முயன்றது சம்மந்தமாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகளை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜீலியஸ் சீசர் அவர்களின் மேற்பார்வையில் திரு.விநாயகம் சிவகாஞ்சி ஆய்வாளர்  அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்த நிலையில் இன்று ( 07.07.2022 ) 

1 ) தியாகு ( எ ) தியாகராஜன் ( 32 ) த / பெ.காசி, 






2 ) வடிவேல் ( 36 ) த/பெ.சோலைமலை,

3 ) குமரேசன் ( 64 ) த / பெ.நடராஜன் மற்றும் 

4 ) ஸ்ரீதர் ( எ ) குள்ள ஸ்ரீதர் ( 30 ) த/பெ.பெருமாள் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். 

இவ்வழக்கில் எதிரிகளை கைதுசெய்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிபயாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.





No comments

Thank you for your comments