ஸ்ரீபெரும்புதூர் அருகே போக்சோ சட்டத்தில் தாய்மாமன் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உபேந்திர ராஜா குடும்பத்தினர் வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு 14 வயது மகள் இருக்கிறாள் அந்த மகள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறாள்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் அந்த 14 வயது சிறுமிக்கு உடல் உபாதை ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சையில் அந்த சிறுமி கருவுற்றிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில்
ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் வந்த ஸ்ரீபெரும்புதூர் மகளிர் போலிசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தாய்மாமன் பீகார் மாநிலம் தருவாங்க நகரைச் சேர்ந்த சுணில் என்பவன் சிறுமியை பாலியல் வன்புனர்வில் ஈடுபட்டது தெரியவந்தது
ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலிசார் மேற்படி சிறுமியின் தாய்மாமன் சுணில் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
No comments
Thank you for your comments