நாளை (04.01.2022) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மாலை 3 மணி அளவிலும் மற்றும் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட கல்யாணி திருமண மண்டபத்தில் மாலை 5 மணியளவில் நாளை (04.01.2022) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் நோயை கருத்தில்கொண்டு மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் நலன் கருதியும் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிக்க உள்ள பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.
1. நோய்த்தொற்று பரவாமல் மற்றும் அதனை கட்டுபடுத்தும் வகையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடித்து அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
2. பொது இடங்களில் தனிநபர் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
3. அவ்வப்போது கைகளை கிருமி நாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்தல் வேண்டும்.
4. முறையான சமூக இடைவெளியை பின்பற்றுதல் வேண்டும்.
மேற்கண்ட கொரோனா நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் மனுக்களை அளித்து மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அரசு அறிவிப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Comment
No comments
Thank you for your comments